காலை உணவாக இந்தப் பழம் பெஸ்ட்; சுகர் பேஷன்ட்ஸ் நோட் பண்ணுங்க: டாக்டர் தீபா
சர்க்கரை நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேந்திரம் வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கால்சியம் மெக்னீஷியம், பொட்டாஷியம் போன்றவை இதில் நிறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதில் க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக காணப்படுகிறது.
Advertisment
இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் நேந்திரம் வாழைப்பழத்தை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், எலும்புகளை வலுப்படுத்தவும், வயிறு தொடர்பான கோளாறுகளை போக்குவதற்கும் இந்தப் பழம் பயன்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நேந்திரம் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, இரண்டு நேந்திரம் வாழைப்பழம், சிறிதளவு வெண்ணெய், தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு ஆகியவற்றை அரைத்து குடிக்கலாம் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். மறுபுறம் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காலை உணவாக ஒரு நேந்திரம் பழம் சாப்பிட்டு, இஞ்சி தேநீர் குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக ஒரு நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்றும், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தினசரி நேந்திரம் வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த நேந்திரம் வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடும் போது, அதில் இருக்கும் சத்துகள் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார்.
நன்றி - Sadhguru sai creations Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.