குடலை க்ளீன் செய்ய மாத்திரை எதுக்கு? இந்த எண்ணெய் 2 ஸ்பூன் போதும்: டாக்டர் தீபா டிப்ஸ்

இன்றைய சூழலில் குடலை சுத்தம் செய்வதற்கு நிறைய மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்ய முன்னர் இருந்த காலத்தில் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தினர் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.

இன்றைய சூழலில் குடலை சுத்தம் செய்வதற்கு நிறைய மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்ய முன்னர் இருந்த காலத்தில் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தினர் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Castor oil uses

குடலை சுத்தம் செய்வதற்கு விளக்கெண்ணெய் பயன்படுகிறது என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

காலை நேரத்தில் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் குடித்தால் வயிறு முழுவதும் சுத்தமாகி விடும் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இன்றைய சூழலில் குடலை சுத்தம் செய்வதற்கு நிறைய மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம்.

ஆனால், இவற்றுக்கு பதிலாக இயற்கையான முறையில் குடலை சுத்தம் செய்ய முன்னர் இருந்த காலத்தில் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தினர் என்று மருத்துவர் தீபா கூறுகிறார். எனினும், தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறை ஏற்றதாக இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் குடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் விளக்கெண்ணெய்யை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

Advertisment
Advertisements

மேலும், இவ்வாறு விளக்கெண்ணெய் குடித்த பின்னர் அதிகமாக எண்ணெய்யில் பொறித்த உணவு மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் அது பிரச்சனையை ஏற்படுத்தும் என்று மருத்துவர் தீபா எச்சரிக்கை விடுக்கிறார்.

எனவே, வீட்டு வைத்திய முறையில் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது, அதனை சரியான வழிகாட்டுதல்களின் பேரில் உபயோகப்படுத்தினால், வேறு விதமான பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் தீபா குறிப்பிட்டுள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Castor oil and its benefits for health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: