யூரின் போனால் சூடாக வருதா? இந்தப் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் தீபா அருளாளன் டிப்ஸ்

முளைகட்டிய வெந்தயத்தை வெயிலில் காயவைத்து அதன் பின்னர் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயப் பொடியை தினமும் காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிடலாம் என்று மருத்துவர் தீபா அருளாளன் தெரிவித்துள்ளார்.

முளைகட்டிய வெந்தயத்தை வெயிலில் காயவைத்து அதன் பின்னர் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயப் பொடியை தினமும் காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிடலாம் என்று மருத்துவர் தீபா அருளாளன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Fenugreek powder uses

வெந்தயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் தீபா அருளாளன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

வெந்தயத்தை சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். அதன்படி, வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊற வைத்த வெந்தயம் முளைகட்டிய பின்னர், அதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இதனை தினசரி காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

மற்றொரு வகையில், இந்த முளைகட்டிய வெந்தயத்தை வெயிலில் காயவைத்து அதன் பின்னர் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயப் பொடியையும் தினமும் காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிடலாம் என்று மருத்துவர் தீபா அருளாளன் தெரிவித்துள்ளார்.

இது தவிர வெந்தயப் பொடியை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினசரி பின்பற்றுவதன் மூலம் உடலில் இருக்கும் சூடு தணியும். மேலும், சிலருக்கு சிறுநீர் வெளியேறும் போது கடுமையான சூடாக இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயப் பொடியை இவ்வாறு உபயோகிக்கலாம் என்று மருத்துவர் தீபா அருளாளன் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

இதேபோல், சிறுநீரக பாதையில் ஏற்படும் பல்வேறு விதமான தொற்றுகளுக்கும் வெந்தயம் மருந்தாக பயன்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளநீரில் வெந்தய பொடியை கலந்து குடிப்பதும் நல்ல பலன் அளிக்கும் என்று மருத்துவர் தீபா அருளாளன் கூறியுள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Fenugreek Seeds

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: