பூண்டு இப்படி சாப்பிடுங்க... ரத்த குழாயில் அடைப்பு வராது; பி.பி குறையும்; டாக்டர் தீபா
இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் எவ்வாறு பராமரிக்கலாம் என்று மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதற்கு உதவக் கூடிய உணவுகளின் பட்டியலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் எவ்வாறு பராமரிக்கலாம் என்று மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதற்கு உதவக் கூடிய உணவுகளின் பட்டியலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்த நாளங்கள் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போது தான் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சீரற்ற இரத்த ஓட்டம் செல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.
Advertisment
உடலின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லவில்லை என்றால், அந்த செல்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை நெக்ரோசிஸ் என்பார்கள். இதனால் உறுப்புகள் செயலிழக்க நேரிடும். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட உடல் பாகத்தை வெட்ட வேண்டியிருக்கும் என மருத்துவர் தீபா எச்சரிக்கை விடுக்கிறார்.
இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும். உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்க, குறிப்பாக 60 வயதுக்கு பிறகு, வழக்கமான உடல் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மூளையின் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். இந்த அடைப்புகள் கொழுப்பு அல்லது இரத்த உறைவுகளால் ஏற்படலாம் என்று மருத்துவர் தீபா வலியுறுத்துகிறார்.
இவற்றை தடுக்க சில உணவு முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். தினமும் 3 - 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், உணவுடன் சேர்த்து பச்சையாக பூண்டு சாப்பிடுவது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், அடைப்புகளை நீக்கவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஆலிவ் விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பசலைக்கீரையில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கிறது. ஆளி விதைகள், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அடைப்புகளைத் தடுக்கவும் உதவும் என்று மருத்துவர் தீபா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.