உணவு முறை மாற்றத்தால் பலருக்கும் மலச்சிக்கள் பாதிப்பு இருக்கும். சிலர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மோஷன் போவதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலருக்கு டீ குடித்தால் தான் மோஷன் வருவதாகவும் கூறப்படுகிறது.
Advertisment
இதற்கான காரணத்தை மருத்துவர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். காலை உண்டது மாலை, மாலை உண்டது காலை என்று ஒரு பழமொழி இருப்பதாக அவர் கூறுகிறார். அதன்படி, ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது மோஷன் செல்ல வேண்டும்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாததன் காரணமாகவே இது போன்று மலச்சிக்கல் பிரச்சனை உருவாவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், நார்ச்சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் திவ்யதர்ஷினி அறிவுறுத்துகிறார்.
மேலும், திரிபலா பொடியை இதற்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்த சூழலில் அதிகப்படியாக துரித உணவுகள் மற்றும் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து விடுவது நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனினும், மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ச்சியாக இருந்து வந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
நன்றி - Clair Veda Ayur Clinic Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.