தூங்கும் போதே சுகர் குறையும்... முளைகட்டிய வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் கௌதமன்
முளைகட்டிய வெந்தயமானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கும் என்று மருத்துவர் கௌதமன் வலியுறுத்துகிறார். இதை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
முளைகட்டிய வெந்தயமானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கும் என்று மருத்துவர் கௌதமன் வலியுறுத்துகிறார். இதை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோய் என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஒரு பொதுவான நோயாக தற்போது மாறி விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை வழிமுறைகள் பலன் தருவதாக கூறப்படுகிறது.
Advertisment
அந்த வகையில், அணுக்களை சரியாக செயல்பட வைக்கும் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இதற்காக, அவர் வெந்தயத்தை சிறந்த மருந்தாகக் குறிப்பிடுகிறார். இதன் பயன்பாடுகள் குறித்து மிஸ்டர் லேடிஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
முளைகட்டிய வெந்தயமானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கும் என்று மருத்துவர் கௌதமன் வலியுறுத்துகிறார். இதை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
அதன்படி, நன்கு முளைகட்டிய வெந்தயத்தை சுமார் 50 கிராம் அளவிற்கு தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது எளிமையான மற்றும் நேரடியான முறையாகும். இது தவிர மற்றொரு வழியும் இருக்கிறது.
Advertisment
Advertisements
அந்த வகையில், முளைகட்டிய வெந்தயத்தை நன்கு அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து குடிக்கலாம். இதுவும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.