கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த பிர்ச்சனையாக இருந்தாலும் அதற்கு இந்த ஒரு டீ போதும் என்றும் அது தயாரிப்பது பற்றியும் டாக்டர் கௌதமன் சமயம் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
இன்றைய காலகட்டத்தில் குடிபழக்கம், அதீத வலி நிவாரணிகள் போன்ற காரணங்களால் ஈரல் பாதிக்கப்படுகிறது என்றும் ஈரல் நோயின் தீவிரத்தை குறைத்து ஆரோக்கியமாக்கும் டீ பற்றி கூறுகிறார். உலக அளவில் கல்லீரல் செயலிழப்பு பிரச்சினையாலும் கல்லீரல் தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இருக்கிறது.
கல்லீரல் நம்முடைய உடலின் ராஜ உறுப்பு. இதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும் பட்டை, சிறுநெருஞ்சில், ஏலக்காய் ஆகியவற்றை வைத்து ஒரு எளிமையான கஷாயத்தை செய்து காட்டுகிறார். இதை காலையில் டீக்கு பதிலாக குடிப்பது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பட்டை சிறுநெஞ்சில் ஏலக்காய் சர்க்கரை(டயபடீஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இனிப்பு வேண்டாம்.)
செய்முறை
தண்ணீரில் சிறுநெஞ்சில், பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இவற்றை வடிகட்டி தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். டீ,காபிக்கு பதிலாக தினமும் காலையில் இதனை குடிக்கலாம்.
உணவுக்கு முன் காலை மாலை இரு வேளைகளிலும் இதனை குடிக்கலாம். கல்லீரலை சுத்தம் செய்து ஆயுளை நீட்டிக்க உதவும். கொழுப்புகள் குறையும், மூட்டு வலிகள் இருக்காது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.