மன உளைச்சலை உண்டாக்கும் மலச் சிக்கல்... சுமூக தீர்வு தரும் சோம்பு; இப்படி எடுத்துக்கோங்க: டாக்டர் கௌதமன்
ஒரு கிளாஸ் சூடான சோம்பு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவும். இந்த எளிய பழக்கம், செரிமான மண்டலத்தைச் சீராக்கி, மலக்கழிவை எளிதாக்கும் என்று அவர் விளக்குகிறார்.
ஒரு கிளாஸ் சூடான சோம்பு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவும். இந்த எளிய பழக்கம், செரிமான மண்டலத்தைச் சீராக்கி, மலக்கழிவை எளிதாக்கும் என்று அவர் விளக்குகிறார்.
மலச்சிக்கல் என்பது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மாத்திரைகள், கடுக்காய், நிலவாகை போன்ற மலமிளக்கும் பொருட்களை சார்ந்து மலம் கழிக்க வேண்டிய நிலை பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சனைக்கு எளிய, இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வை மருத்துவர் கௌதமன் தனது எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக இதன் தகவல்களை ஸ்ரீஇ வர்மா என்ற யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அவரது கூற்றுப்படி, சோம்புக்கு மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும் அற்புதமான ஆற்றல் உள்ளது. மருத்துவர் கௌதமன் பரிந்துரைப்பது மிகவும் எளிமையான ஒரு முறை. காலை உணவுக்குப் பிறகு அல்லது இரவு உணவுக்கு பிறகு, ஒரு கிளாஸ் சூடான சோம்பு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவும். இந்த எளிய பழக்கம், செரிமான மண்டலத்தைச் சீராக்கி, மலக்கழிவை எளிதாக்கும் என்று அவர் விளக்குகிறார்.
மலச்சிக்கல் மட்டுமல்ல, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் சோம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மருத்துவர் கௌதமன் கூறும் மற்றொரு குறிப்பு என்னவென்றால், 300 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து, அதை 100 மில்லி லிட்டராக கொதிக்க வைத்து குடித்தால், உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். சோம்பு, உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பை கரைக்க உதவுவதால், இது எடைக் குறைப்புக்கு சிறந்த துணையாக அமைகிறது.
இந்த இரண்டு முக்கியப் பயன்கள் மட்டுமின்றி, சோம்பில் மேலும் பல எண்ணற்ற மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன என்றும் மருத்துவர் கௌதமன் குறிப்பிடுகிறார். செரிமானத்தை மேம்படுத்துவது, வாயுத் தொல்லைகளை குறைப்பது போன்றவை சோம்பின் நன்மைகளாக பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisements
எனவே, மலச்சிக்கல் அல்லது உடல் எடை குறைப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கும் இந்த எளிய சோம்பு நீர் வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.