துவையல் ஒண்ணு தான்... ஆனால் பலன் 10; இப்படி சாப்பிடுங்க: டாக்டர் கௌதமன் டிப்ஸ்

ஒரே துவையல் ஆனால் அதில் 10 க்கும் மேற்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதாக டாக்டர் கௌதமன் கூறுகிறார். அவ்வளவு சத்து நிறைந்த ஒரு துவையல் என்ன என்று பார்ப்போம்.

ஒரே துவையல் ஆனால் அதில் 10 க்கும் மேற்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதாக டாக்டர் கௌதமன் கூறுகிறார். அவ்வளவு சத்து நிறைந்த ஒரு துவையல் என்ன என்று பார்ப்போம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
pirandai

பிரண்டை, "வஜ்ரவல்லி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது, இது இந்திரனின் வஜ்ராயுதத்திலிருந்து உதிர்ந்த ஒரு தாவரமாகும். "வஜ்ரம்" (வைரம்) போல எலும்புகளை பலப்படுத்தும் சக்தி கொண்டது என்பதால் இதற்கு இந்த பெயர் என்று டாக்டர் கௌதமன் கூறுகிறார். மேலும் பிரண்டையின் முக்கியத்துவம் மற்றும் அதனை உணவில் சேர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்ம டாக்டர் யூடியூப் பக்கத்தில் விளக்கினார்.

Advertisment

பிரண்டை துவையலின் 10 பலன்கள்:

  1. பிரண்டையை துவையலாக கலவை சாதத்துடன் சேர்த்து உண்பதால் பல நன்மைகளை பெறலாம்.
  2. செரிமானம் சீராகும்: செரிமான மண்டலத்தை சீராக்கி, வயிறு உப்புசம் ஏற்படுவதை தடுக்கும்.
  3. ஈரல் செயல்பாடு மேம்படும்: ஈரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கும்.
  4. பெருங்குடல் நோய்கள் குறையும்: பெருங்குடல் சார்ந்த நோய்கள் ஏற்படாது.
  5. மலச்சிக்கல் நீங்கும்: மலச்சிக்கலை போக்கும்.
  6. எலும்புகள் பலப்படும்: எலும்புகளுக்கு வலிமை அளித்து, தேய்மானத்தை தடுக்கும்.
  7. பசியின்மை நீங்கும்: பசியின்மை சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
  8. வாய்வு தொல்லை நீங்கும்: வயிற்றில் இருக்கக்கூடிய வாய்வை (வாதம்) குறைக்கும்.
  9. ஏப்பம் எளிதாகும்: நன்றாக ஏப்பம் வருவதற்கு உதவும்.
  10. மனம் சார்ந்த நோய்கள்: உடல் சோர்வு மற்றும் மனம் சார்ந்த சில நோய்களுக்கும் பிரண்டை ஒரு சிறந்த உணவாகும்.
  11. வலி நிவாரணி: மூட்டு வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகளை படிப்படியாகக் குறைக்கும்.

பிரண்டையை சமைக்கும் முறை:

பிரண்டையை சமைப்பதற்கு முன், புளி, உப்பு, மஞ்சள் கலந்த நீரில் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிரண்டையால் ஏற்படும் அரிப்புத்தன்மை நீங்கும்.

பிரண்டை உப்பு:

பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, உலர்த்தி, எரித்து கிடைக்கும் சாம்பலை தண்ணீரில் கரைத்து, அதிலிருந்து கிடைக்கும் வெண்மை நிற உப்பு "பிரண்டை உப்பு" என்று அழைக்கப்படுகிறது. இந்த உப்பை மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மூட்டு வலி வராமல் தடுக்கவும் பிரண்டை உப்பு உதவும்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: