கிட்னி கற்களால் தீராத வலி? உடனடியாக சரி செய்ய செம்ம வீட்டு வைத்தியம்: சொல்லும் டாக்டர் கௌதமன்

சிறுநீரக கல் குறைய டாக்டர் கௌதமன் சில வீட்டுக்குறிப்புகளை பற்றி கூறுகிறார். எளிமையான வீட்டுக்குறிப்பு மூலம் கல் கரைவதை பார்க்கவும் முடியும் என்கிறார்.

சிறுநீரக கல் குறைய டாக்டர் கௌதமன் சில வீட்டுக்குறிப்புகளை பற்றி கூறுகிறார். எளிமையான வீட்டுக்குறிப்பு மூலம் கல் கரைவதை பார்க்கவும் முடியும் என்கிறார்.

author-image
WebDesk
New Update
kidney stone

கிட்னி கல் சரியாக டாக்டர் கௌதமன் எளிமையான வீட்டுக்குறிப்பு ஒன்றை புதுயுகம் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisment

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரை அடர்த்தியாக்கி, கல் உருவாகும் தாதுக்கள் படிகமாவதை ஊக்குவிக்கும். சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாக காரணம் என்றும் டாக்டர் கூறுகிறார்.  மேலும் அதனை கரைக்கவும் சில வீட்டுக்குறிப்புகளை கூறுகிறார்.

டிப்ஸ் 1: சிறுநீரக கல் வலியை குறைக்க, பக்கெட்டில் பாதி அளவு குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து 10 நிமிடம் கால் வைக்கவும். அதிக வலி இருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது வலியை குறைக்க உதவும்.

டிப்ஸ் 2: நிறைய தண்ணீர் குடிக்கவும்: ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும், கல் உருவாகும் பொருட்களை நீர்த்துப்போகச் செய்யவும் உதவும்.

Advertisment
Advertisements

டிப்ஸ் 3:  சிட்ரஸ் பழச்சாறுகள்: எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழச்சாறுகளில் உள்ள சிட்ரேட், கல் உருவாவதைத் தடுக்க உதவும்.

டிப்ஸ் 4: உணவு முறை: கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை குறைப்பது சிலருக்கு உதவலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறையை மாற்றிக்கொள்வது நல்லது.

டிப்ஸ் 5: வெப்ப ஒத்தடம்: வலி இருக்கும் இடத்தில் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுப்பது தசைப்பிடிப்பை குறைத்து வலியைப் போக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tips to keep your kidneys healthy Basic health tips to reduce the risk of kidney stones

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: