தரையை தட்டும் அளவுக்கு முடி வளரணுமா? டெய்லி 50 கிராம் பயறு; கொஞ்சம் இந்த காய்கறி சாப்பிடுங்க போதும்: டாக்டர் கௌதமன் டிப்ஸ்
தினமும் சுமார் 50 கிராம் அளவிற்கு பச்சை பயிறை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். பச்சை பயறில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
தினமும் சுமார் 50 கிராம் அளவிற்கு பச்சை பயிறை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். பச்சை பயறில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
முடி உதிர்வு என்பது பலருக்கும் ஒரு கவலையாகவே இருந்து வருகிறது. ஆரோக்கியமான, அடர்த்தியான முடிக்கு வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சரியான உணவு முறையும் முக்கியம் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் மருத்துவர் கௌதமன் கூறுகிறார். அதன்படி, நமது தினசரி உணவுப் பழக்கங்கள் முடி வளர்ச்சியை நேரடியாக பாதிக்கின்றன என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
Advertisment
முடி வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் ஒன்று புரதம். எனவே, ஒவ்வொரு நாளும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார். முடியின் அடிப்படை கட்டமைப்பாக புரதம் இருப்பதால், அதன் குறைபாடு முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
புரதத்துடன் சேர்த்து, பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் மருத்துவர் கௌதமன் சுட்டிக்காட்டுகிறார். இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன.
இது தவிர, தினமும் சுமார் 50 கிராம் அளவிற்கு பச்சை பயிறை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். பச்சை பயறில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
Advertisment
Advertisements
பீன்ஸ், அவரைக்காய், கோவக்காய், பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், முடியின் வளர்ச்சிக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் உறுதி செய்கிறது.
எனவே, இந்த உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.