வெறும் வயிற்றில் அரை மூடி தேங்காய்... தொப்பை இருக்குற இடம் தெரியாம போயிடும்: டாக்டர் கௌதமன் டிப்ஸ்!
உடல் எடையை எவ்வாறு இயற்கையான முறையில் குறைக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அதற்கு தேங்காயை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உடல் எடையை எவ்வாறு இயற்கையான முறையில் குறைக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அதற்கு தேங்காயை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு முறை உடல் எடை அதிகரித்து விட்டால் அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதற்காக கடுமையான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
Advertisment
அந்த வகையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றலாம் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார். குறிப்பாக, இதற்கு தேங்காய் அதிகளவு பயன்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையவில்லை என்று பல நோயாளிகள் தன்னிடம் கூறுவதாக மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அவ்வாறு வருபவர்களிடம் ஒரு முக்கியமான அறிவுரையை தாம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, காலை நேரத்தில் சமைத்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, அரை மூடி தேங்காயை பூ போன்று துருவி சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். தேங்காயில் இருக்கும் நார்ச்சத்து, நமது செரிமான மண்டலத்தை சீராக்குவதற்கு பயன்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
எனவே, உடல் எடையை குறைத்து, தொப்பையை கரைத்து, மெலிதாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் காலை உணவாக தேங்காய் துருவலை சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். வெறும் தேங்காய் துருவல் போதவில்லை என்று கருதுபவர்கள், 50 கிராம் பயிறு வகைகள் அல்லது பழ வகைகளை சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடல் எடை குறைப்புக்கு தேங்காயை போன்று வேறு எதுவும் நல்ல மருந்தாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ள மருத்துவர் கௌதமன், அதனை தொடர்ந்து சாப்பிடும் போது ஆரோக்கியம் மேம்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Namma Doctor Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.