/indian-express-tamil/media/media_files/2025/02/05/0pREn9zNpfAp40QMoHsH.jpg)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் தொல்லையால அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மருந்து தயாரிப்பது எப்படி என மருத்துவர் ஜெய கல்பனா குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் சுக்கு குறித்து பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், சிற்றரத்தை குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை என மருத்துவர் ஜெய கல்பனா தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்திய பொருள் சிற்றரத்தை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுக்கை விட 10 மடங்கு சிற்றரத்தை வீரியமாக வேலை பார்க்கும் என மருத்துவர் ஜெய கல்பனா கூறுகிறார். நெஞ்சு பகுதியில் இருக்கும் சளியை முற்றிலும் இளக்கி வெளியேற்ற சிற்றரத்தை பெரிதும் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் சிற்றரத்தையை விட வேறு ஒரு சிறந்த மருந்து இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேங்காய் துருவல், பனங்கற்கண்டு ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சுடுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பனங்கற்கண்டு லேசாக இளகி விடும். இப்போது, இரண்டு அல்லது மூன்று சிட்டிகை சிற்றரத்தை பொடி, இரண்டு துளிகள் நெய் சேர்க்க வேண்டும்.
இந்த மருந்தை சூடாக தயாரித்து நெஞ்சு சளி, இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த மருந்து சளியை பெரிதும் கட்டுப்படுத்த உதவுவதாக மருத்துவர் ஜெய கல்பனா அறிவுறுத்துகிறார். எனவே, அதிகப்படியான சளியால் அவதிப்படுபவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.