புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் பிற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோய் வராமல் காக்கின்றது. மேலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு நோய்களை தடுத்து வலுவூட்டிடும்.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கமின்மையை சீராக்கி, தோலின் இளமையை பாதுகாத்திடும் மற்றும் இதில் உள்ள வேதிப்பொருட்கள் பற்களின் வலுவான ஆரோக்கியத்தை பாதுகாத்திடும்.
கேழ்வரகு, ஏலக்காய், இந்துப்பு ஆகிய பொருட்களை கொண்டு (ராகி பால்) கேழ்வரகு பால் செய்து காலை நேரத்தில் அருந்தி வரும் சிறந்த ஒரு பழக்கத்தினால் எலும்பு மற்றும் நரம்புகள் ஆரோக்கியம் பெற்று உடலுக்கு உறுதியை தந்திடும்.
கேழ்வரகு, தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு தானியமாகும். இது வெறும் தானியம் மட்டுமல்ல, நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்களை வழங்கும் ஒரு அருங்கொடையாகும். அதைப் பற்றி இங்கு காணலாம்.
கேழ்வரகில் நிறைந்துள்ள புரதம், நம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகளின் வலிமைக்கும் அவசியமானது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்தை எளிதாக்கி, நீண்ட நேரம் பசியைத் தணிக்கிறது. மேலும், இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு நோய்களைத் தடுக்கிறது. இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுத்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
சத்துக்களின் சாம்ராஜ்யம் ராகி பால் !
கேழ்வரகில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கேழ்வரகை பல்வேறு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு கூழ், கேழ்வரகு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு உப்புமா போன்றவற்றை தயாரிக்கலாம். இவை சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானவை கூட.
நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொண்டதற்கு இதுவே காரணம். நாம் அனைவரும் நம் பாரம்பரிய உணவுகளை மீண்டும் ஏற்றுக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.