இப்போதைய காலக்கட்டத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு PCOD, எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பப்பை கட்டிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, அதன் செயல்திறன் குறைவு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்ய மருத்துவர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் சத்தான உணவு பற்றி கூறுகிறார்.
Advertisment
தாமதமாக குழந்தைபேறுக்கு முக்கியமான காரணங்கள்:
1. உணவுக் குறைபாடு – ஆரோக்கியமான புரோட்டீன் வைட்டமின்கள் இல்லாமல் போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை
2. தொடர்ச்சியான மன அழுத்தம் (Stress) – இதுவே பெரும்பாலான உடல் கோளாறுகளுக்கு காரணம்.
Advertisment
Advertisements
3. மாசு, பிளாஸ்டிக் உட்பட வேதிப் பொருட்கள் – ஜீனோஎஸ்ட்ரோஜன் சேர்ந்து ஹார்மோன்களை பாதிக்கிறது.
4.தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் & செரிமான கோளாறுகள் – உடலின் இயல்பை மாற்றுகிறது.
இந்நிலையில், இயற்கை மூலிகைகள் அடங்கிய ஒரு சிறந்த உட்கொள்ளும் முறையை நாம் பயன்படுத்தலாம். இந்த மூலிகைச் சத்து கலவையை இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடிக்கலாம்.
பெண்களுக்கு: • ஜாதிக்காய் பொடி – ¼ டீஸ்பூன் • அமுக்கரா பொடி – ½ டீஸ்பூன் • கசகசா பொடி – ½ டீஸ்பூன் • சதாவரி சூரணம் – 1 டீஸ்பூன் • மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன் • பனைவெல்லம் / நாட்டுச்சக்கரை – தேவையான அளவு
ஆண்களுக்கு: • ஜாதிக்காய் பொடி – ¼ டீஸ்பூன் • அமுக்கரா பொடி – ½ டீஸ்பூன் • கசகசா பொடி – ½ டீஸ்பூன் • ஓரிதழ் தாமரை சூரணம் – 1 டீஸ்பூன் • மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன் • பனைவெல்லம் / நாட்டுச்சக்கரை – தேவையான அளவு
இவை அனைத்தையும் பாலில் சேர்த்து குடித்து வர ஆரோக்கியமான கருமுட்டைகள் & விந்தணுக்கள் வளரும். கர்ப்பப்பை & விந்தணு சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.