பி.சி.ஓ.டி.,யால் அதிகரித்த எடையை ஈஸியா குறைக்கலாம்… இந்த டீ குடிங்க; டாக்டர் ஜெயரூபா

பிசிஓடி இருக்கும் பெண்கள் சிலருக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்னதான் மாத்திரை மருந்துகள் எடுத்து கொண்டாலும் எடை குறையவில்லை என்று புலம்புவார்கள் அவர்கள் எல்லாம் டீ குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி என்று டாக்டர் ஜெயரூபா டிப்ஸ் ஒன்றை கூறுகிறார்.

பிசிஓடி இருக்கும் பெண்கள் சிலருக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்னதான் மாத்திரை மருந்துகள் எடுத்து கொண்டாலும் எடை குறையவில்லை என்று புலம்புவார்கள் அவர்கள் எல்லாம் டீ குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி என்று டாக்டர் ஜெயரூபா டிப்ஸ் ஒன்றை கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
pcod jeyaruupa

பிசிஓடி  (PCOD) பாதிப்புள்ள பெண்களுக்கு எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனை. ஹார்மோன் சீர்கேடுகள், மாதவிடாய் முறையின்மை, தேவையற்ற முடி வளர்ச்சி, கருப்பையில் சிக்கல்கள் போன்றவை PCOD நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

Advertisment

இந்த நிலை தொடர்ந்து அதிகரிக்கும்போது, உடலில் கொழுப்பு சேர்த்தல், இன்சுலின் எதிர்ப்பு, சோர்வு, மன அழுத்தம் மற்றும் நம்பிக்கை குறைவு போன்ற பிரச்சனைகளும் உருவாகும். இத்தகைய நிலைகளில், எடை குறைப்பு மிகவும் அவசியம். எடை குறைப்பதற்கான முதல் படி, உடலை டிடாக்ஸ் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும்.

 இதை தொடர்ந்து, சீரான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இணைந்து மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். பிசிஓடியில் இருந்து விடுபட குடிக்க வேண்டிய டீ எப்படி செய்வது என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். அதற்கு முன்பாக பிசிஓடியின் அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

பிசிஓடியின் அறிகுறிகள்:

ஒழுங்கற்ற மாதவிடாய்
தேவையற்ற முடி வளர்ச்சி
கருப்பை சிக்கல்கள்
எடை அதிகரிப்பு
உடல் சோர்வு, மன அழுத்தம்
இன்சுலின் எதிர்ப்பு

தேவையான பொருட்கள்:

மர மஞ்சள் பொடி
நாய் ஊருவு பொடி
(இரண்டும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும்)

செய்முறை:

Advertisment
Advertisements

இரண்டும் சம அளவில் பொடி செய்து சேர்க்கவும். 250 மில்லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போதே 3–4 கிராம் இந்த பொடியை சேர்க்கவும். சுமார் பாதி அளவிற்கு தண்ணீர் குறையும்போது வடிகட்டவும். வெறும் வயிற்றில் இந்த ஸ்லிம் கஷாயத்தை குடிக்கலாம். இந்த கஷாயத்தை தினமும் காலை அல்லது மாலை எடுத்தால் பிசிஓடி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த பலன்களை பெறலாம். 

கசாயம் பிசிஓடி உடன் எடை குறைக்க உதவும் முக்கிய வழிமுறைகள் சிலவற்றையும் பார்க்கலாம். எடை குறைக்க உதவும் மற்றொரு முக்கிய வழிகள் பற்றி பார்ப்போம். 

டிடாக்ஸிபிகேஷன்: வாரத்திற்கு ஒரு நாள் முழு உடல் சுத்திகரிப்பு

குடல் நலனை மேம்படுத்துதல்: மோர் மற்றும் நறுமண மூலிகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உணவுமுறை: காம்ப்ளெக்ஸ் கார்ப் உணவுகள் (மில்லட்ஸ், ராகி, கம்பு) அதிகமாக கீரைகள், பழங்கள், நாட்டுக்கோழி முட்டை, சுண்டல் போன்ற புரத உணவுகள் எடுத்து கொள்ளலாம்.

உடற்பயிற்சி: தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மற்றும் 21 முறை சூர்ய நமஸ்காரம் செய்யவும். புஜங்காசனம், சேது பந்தாசனம், பட்டாம்பூச்சி ஆசனம் போன்ற யோகாசனங்கள் செய்வது சிறந்தது.

உணவு நேரம்: இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்னதாக முடிக்க வேண்டும். 

 பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

PCOD Foods to help get rid of PCOD

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: