காபி வகைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் உடலின் தேக ஆரோக்கியத்தை சீராக்கிடும் தேற்றான் கொட்டை காபி நமது உடலுக்கு மருந்தாகவே செயல்பட்டு ஆரோக்கியம் தருகின்றது என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
உடல் பலத்தை அதிகரித்து, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உடற்சூட்டை நீக்கி, சிறுநீர் மற்றும் கண் எரிச்சலை போக்கி, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து, நரம்பு சார்ந்த பிரச்சனைகள் எளிதில் குணம் அடைய செய்கின்றது.
தேவையான பொருட்கள்:
தேற்றான் விதை இஞ்சி எலுமிச்சை நாட்டு சர்க்கரை
Advertisment
Advertisements
செய்முறை:
தேற்றான் கொட்டை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வந்து வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் சிறிது தேற்றான் கொட்டை காபி பொடி சேர்த்து அதனுடன் நறுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையையும் அதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் அடுப்பை வைத்துக் கொள்ளவும். இறக்கும் நேரத்தில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து விட்டு வடிகட்டி இந்த காபி குடிக்கலாம்.
எப்போதும் வீட்டில் குடிக்கும் காபி, டீக்கு பதிலாக தேற்றான் கொட்டை காபி குடிக்கலாம். குளிர்ச்சியை கொடுக்கும் கண் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.