சாப்பிட்ட பின் தினமும் ஒரு கிராம்பு… கல்லீரல் கொழுப்பைக் குறைக்கும்; டாக்டர் ஜெயரூபா
கல்லீரல் கொழுப்பைக் குறைக்க கிராம்பு எவ்வாறு பயன்படுகிறது என மருத்துவர் ஜெயரூபா குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராம்பில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
செரிமான கோளாறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு கிராம்பு மருந்தாக பயன்படுகிறது என மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். குறிப்பாக, தினமும் உணவு எடுத்துக் கொண்ட பின்னர் ஒரு கிராம்பை கடித்து சாப்பிட்டால், இது போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இதன் மூலம் வயிற்றில் இருக்கக் கூடிய காற்றும் குறையத் தொடங்கும். வயிறு வலி தொல்லை இருப்பவர்களுக்கு மருந்தாக கிராம்பு செயலாற்றுகிறது. சிலருக்கு பசி உணர்வு சீராக இருக்காது. அப்படி இருக்கும் போது உணவு எடுத்துக் கொள்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாக கிராம்பை சாப்பிடலாம்.
அல்சர் பாதிப்பு இருப்பவர்கள், கிராம்பு பொடியுடன் தேன் கலந்து சாப்பிடலாம் என மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கிராம்பு உதவுகிறது. பலருக்கு உணவு முறை மாற்றத்தால் கல்லீரலை சுற்றிலும் கொழுப்பு படியத் தொடங்கும்.
இத்தகைய பாதிப்பு கொண்டவர்களும் தினமும் உணவுக்கு பின்னர் ஒரு கிராம்பை சாப்பிடலாம். இது கல்லீரலில் சுற்றியிருக்கும் கொழுப்பை குறைக்க உதவி செய்யும். மேலும், உடல் உறுப்புகளில் வலி இருந்தால், கிராம் கலந்த தேநீரை பருகலாம். இவை மருந்தாக செயல்படும்.
Advertisment
Advertisements
தசைகளில் உருவாகும் இன்ஃப்ளமேஷனை குறைக்கும் தன்மை கிராம்பில் இருக்கிறது. கிராம்பு எடுத்துக் கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கிராம்பு உதவி செய்கிறது.
அதனடிப்படையில், செரிமான பிரச்சனைக்கு தீர்வு, கல்லீரல் பாதிப்பை குறைக்கும் தன்மை, உடல் எடை குறைப்பு, வலி நிவாரணி போன்று பல்வேறு பயன்கள் கிராம்பின் மூலம் கிடைப்பதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். எனவே, சரியான முறையில் கிராம்புகளை பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.