உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு பசியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான தீர்வு குறித்தும் டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கும், PCOS, மெனோபாஸ், பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும், இந்த சத்து நிறைந்த கஞ்சி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
இந்த கஞ்சியை எப்படி தயாரிக்கலாம் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
முளைகட்டிய கேழ்வரகு, கம்பு, கொள்ளு - இதை நிழலில் உலர்த்தி வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். (100 கிராம்)
சுக்கு, சீரகம் – 10 கிராம் அளவில் சேர்த்தால், உடலுக்கு தேவையான செரிமான சக்தியும், கொழுப்பு குறைக்கும் நன்மையும் பெறலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இந்த பொடியை வெந்நீரில் கலந்து கஞ்சி தயாரிக்கலாம் அல்லது மோர், இந்துப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கஞ்சியை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. பசியை கட்டுப்படுத்தும் – அதிகமாக உணவு தேவையில்லாமல், உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும்.
2. சிறந்த புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து – உடல் எடையை சமநிலைப்படுத்தும்.
3. கொழுப்பை குறைக்கும் – உடலில் தேங்கிய கொழுப்பை கரைக்க உதவும்.
4. செரிமானத்திற்கு சிறப்பு – முளைகட்டிய தானியங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் – PCOS, மெனோபாஸ், மற்றும் பிற ஹார்மோன் பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கும்.
இந்த உணவு முறையை தொடர்ந்து பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாகவும், எடை கட்டுப்பாட்டிலும் இருக்கும். மேலும் 45 நிமிட நடைபயிற்சி, சுவாசப் பயிற்சி, மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றையும் இணைத்து கொண்டால் உடல் எடை குறைவது எளிமையாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.