குழந்தைகளின் வயிற்றுப் புழு பிரச்னைக்கு இயற்கையான தீர்வு… இந்த சிம்பிள் டீ போதும்; டாக்டர் ஜெயரூபா
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் புழு பிரச்னைக்கு ஒரு எளிய வீட்டுக்குறிப்பை டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். இதனை வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் புழு பிரச்னைக்கு ஒரு எளிய வீட்டுக்குறிப்பை டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். இதனை வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.
வயிற்றுப்புழுக்கள் என்பது குழந்தைகளிடையே அடிக்கடி காணப்படும் பொதுவான உடல்நலக் கோளாறுகளில் ஒன்று. இவை அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் வளராததாலும், தூய்மையற்ற பழக்கவழக்கங்களாலும் ஏற்படுகின்றன.
Advertisment
கைகளை கழுவாமல் உணவு எடுத்தல், மண்ணில் விளையாடுவது, அதிகம் சாக்லேட் போன்ற இனிப்புகள் உட்கொள்வது போன்றவற்றால் வயிற்றுப்புழுக்கள் பெருகக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. இதனை எப்படி வீட்டுக்குறிப்பு மூலம் சரிசெய்யலாம் என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
இதனை சரிசெய்ய ஒரு அற்புதக் கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயார் செய்து, மூன்று நாட்கள் தொடர்ந்து குடிக்கலாம். வாய்விடங்கம், கொத்தமல்லி விதை மற்றும் இலவங்கம் ஆகிய மூன்றையும் சரியான அளவில் சேர்த்து, தேன் கலந்த இந்த கஷாயம் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியது.
இது மட்டுமல்லாமல், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இந்த சிகிச்சை முறையைப் பின்பற்றுவதன் மூலம், புழுக்கள் மூலம் பரவக்கூடிய தொற்றுகள் ஒழிக்கப்படும்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
வாய்விடங்கம் – 1 மேசைக் கரண்டி இலவங்கம் – 2 கொத்தமல்லி விதை – 1 மேசைக் கரண்டி தேன்
செய்முறை:
வாய்விடங்கம், இலவங்கம் மற்றும் கொத்தமல்லி விதையைச் சேர்த்து நன்கு பொடி செய்து வைக்கவும். 200 மில்லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது, முன்னமே அரைத்திருக்கும் மூன்றும் சேர்க்கவும்.
தேவைப்பட்டால், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இது ருசியாகவும் குழந்தைகளுக்குச் சுலபமாகவும் இருக்க உதவும். நான்காவது நாள் காலை நேரத்தில் உள்ளுக்குச் சாப்பிடக்கூடிய விளக்கெண்ணெய் (குழந்தையின் வயதிற்கேற்ப அரை டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை) கொடுக்கலாம்.
கஷாயம் கொடுக்கும் போது குழந்தை இனிப்புகள், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம். வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புழுக்கள் அகற்றும் முறையை பின்பற்ற வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.