மலச் சிக்கலுக்கு இனி மாத்திரை வேணாம்... இந்த காய்கறி, பழங்கள் மட்டும் போதும்: டாக்டர் ஜோன்ஸ் செங்கோட்டையன்
கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாகவும் உட்கொள்வது மலச்சிக்கலை உண்டாக்கும் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாகவும் உட்கொள்வது மலச்சிக்கலை உண்டாக்கும் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கல் என்பது தினசரி மலம் கழிப்பதில் சிரமம் அல்லது வலி ஏற்படுவது ஆகும். இது மந்தம், சோர்வு, வயிற்று உப்புசம் போன்ற பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இது தொடர்பான பல்வேறு தகவல்களை டாக்டர் எஸ்.ஜே ஹாட் டிவி என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
சரியான உணவுப் பழக்கம் இல்லாததே மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறுகிறார். உணவில் நார்ச்சத்து மற்றும் வழுவழுப்புத் தன்மை குறைவாக இருந்தால், உணவு எளிதில் வெளியேறாது. கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாகவும் உட்கொள்வது மலச்சிக்கலை உண்டாக்கும் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கலைத் தடுக்க எளிய வழிகளை பின்பற்றலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதன்படி, உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். பருவகால பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு கொய்யா போன்றவற்றை முழுமையாக சாப்பிட வேண்டும். இவற்றை ஜூஸாக அருந்துவதை தவிர்க்கலாம்.
மேலும், பாலிஷ் செய்யப்படாத பழுப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை விளைவிக்கும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். எனவே, இவை அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றும் போது மலச்சிக்கலை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஜோன்ஸ் செங்கோட்டையன் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.