நீங்க மதுப் பிரியரா? கல்லீரல் முக்கியம் பாஸ்... கொதிக்கிற நீரில் இஞ்சி, பூண்டு சேர்த்து தினமும் இப்படி குடிங்க!
நம் கல்லீரலை எவ்வாறு ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திக் மதிவாணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதற்கான பானம் தயாரிக்கும் முறையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதே கல்லீரல் தான் என மருத்துவர் கார்த்திக் மதிவாணன் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டியது நமது ஒவ்வொருவரின் பணியாகும். நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, இது பெரிதும் உதவுகிறது. இதற்காக ஒரு பிரத்தியேக பானத்தை நம் வீட்டில் தயாரிக்கலாம்.
Advertisment
அதன்படி, தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இஞ்சி, பூண்டு, பட்டை ஆகிய அனைத்தையும் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
இந்த தண்ணீர் ஆறியதும் அதனை வடிகட்டி எடுத்து, அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கலந்து தினசரி குடிக்கலாம். இப்படி குடிக்கும் போது நம் கல்லீரல் 95 சதவீதம் சுத்தமாக இருக்கும் என மருத்துவர் கார்த்திக் மதிவாணன் அறிவுறுத்துகிறார்.
மதுப்பழக்கம் கொண்டவர்கள் தங்கள் கல்லீரலை பாதுகாக்க வேண்டுமானால், இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட குடிக்கலாம். இந்த நீரை பருகும் போது ஃபேட்டி லிவர் ஏற்படுவதற்கான வாய்ப்பை 75 சதவீதம் நம்மால் தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இதனை பருகலாம்.
Advertisment
Advertisements
மேலும், இந்த நீரை எடுத்துக் கொள்ளும் போது சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் நம் கல்லீரல் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என மருத்துவர் கார்த்திக் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.