கல்லீரல் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு, இது 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது. அதன் செயல்பாடு சிறந்த முறையில் தொடர, அதை நச்சு நீக்கம் செய்வது மிகவும் முக்கியம். அப்படியாக கல்லீரலை சுத்தம் செய்யும் ஒரு ட்ரிங் பற்றி டாக்டர் கார்த்திக் மதிவானன் ஹர்ஷூஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
இஞ்சி பூண்டு பட்டை எலுமிச்சை சாறு தேன் மஞ்சள் தூள்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து இஞ்சி, பூண்டு, பட்டை ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டவும். அதில் எலுமிச்சை சாறு, தேன், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து தினமும் குடித்து வர 95 சதவீதமான ஈரல் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்று அவர் கூறுகிறார்.
இரத்தத்தை சுத்தப்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல், ஆற்றலை உற்பத்தி செய்தல் மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல் போன்ற வேலைகளை கல்லீரல் செய்கிறது. கல்லீரல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமித்து வைக்கிறது. கல்லீரல் கணிசமான அளவு வைட்டமின்கள் A, D, E, K மற்றும் B12, அத்துடன் இரும்பு மற்றும் தாமிரத்தையும் சேமித்து வைக்கிறது.
கல்லீரல் குளுக்கோஸை செயலாக்க வேலை செய்கிறது. இது இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸை நீக்கி கிளைகோஜனாக சேமித்து வைத்து தேவைப்படும்போது, அது கிளைகோஜனை மீண்டும் குளுக்கோஸாக மாற்றும்.
கொழுப்பை, நாம் சரியாக ஜீரணிக்க முடியாது. எனவே, கல்லீரலை சுத்தம் செய்து நச்சு நீக்கம் செய்வது முக்கியமாகும். மேலும் இந்த ஜூஸ் கல்லீரலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.