உஷார் மக்களே... இவ்ளோ தண்ணீர் சேர்க்காமல் லெமன் ஜூஸ் குடிக்கவே வேண்டாம்: டாக்டர் கார்த்திகேயன்
எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் போது நாம் செய்யக் கூடிய தவறுகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் போது நாம் செய்யக் கூடிய தவறுகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெயில் காலம் தொடங்கிய நிலையில் பலரும் பழச்சாறு குடிக்க விருப்பப்படுவார்கள். குறிப்பாக, எலுமிச்சை சாறு தான் பலரது விருப்பத் தேர்வாக இருக்கும். அதன்படி, எலுமிச்சை சாறை எவ்வாறு குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
எலுமிச்சை சாறு என்பது ஒரு விதமான சிட்ரிக் ஆசிட். எனவே, இதனை அப்படியே குடிப்பது குடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக எலுமிச்சை சாறில் எப்போது தண்ணீர் சேர்த்து மட்டுமே குடிக்க வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஒரு பங்கு எலுமிச்சை சாறுக்கு ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து தான் இதனை குடிக்க வேண்டும். இது தவிர எலுமிச்சை சாறை ஸ்ட்ரா கொண்டு குடிக்கும் வழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் பற்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க உதவும்.
அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு சில சமயத்தில் எலுமிச்சை சாறு எரிச்சலை உருவாக்கக் கூடும். எனவே, வயிற்றில் புண் இருப்பவர்கள் கூடுமானவரை எலுமிச்சை சாறு குடிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. இது அவர்கள் குடலை பாதுகாக்கும்.
Advertisment
Advertisements
சிலர் வேகமாக மூச்சை இழுத்து விடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உடலில் கார்பன்டைஆக்ஸைடு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனால் இதய துடிப்பு அதிகரிக்கும். மேலும், பொட்டாஷியம் அளவு குறையும்.
இத்தகைய பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக எலுமிச்சை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, எலுமிச்சை மட்டுமின்றி சிட்ரிக் ஆசிட் இருக்கும் பழங்களை தொடர்ச்சியாக எடுப்பதையும் அவர்கள் தவிர்க்கலாம்.
அடுத்தபடியாக எலுமிச்சை சாறை சூடு தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இப்படி செய்யும் போது அதில் இருக்கும் வைட்டமின் சி சத்துகள் அழிந்து விடுகின்றன. எனவே, சாதாரண தண்ணீரில் மட்டுமே எலுமிச்சை சாறை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.