கருப்பு கவுனியை விட இது நல்லா இருக்கு; இந்த அரிசியில் தோசை சாப்பிட்டா சுகர் ஏறாது: டாக்டர் கார்த்திகேயன்
சிவப்பு அரிசியில் பல்வேறு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது உதவுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிவப்பு அரிசியில் பல்வேறு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது உதவுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக கருப்பு கவுனி அரிசியில் பல்வேறு பயன்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், கருப்பு கவுனி அரிசியைக் காட்டிலும் சிவப்பு அரிசியில் கூடுதல் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
சிவப்பு அரிசியானது, பட்டை தீட்டப்படாத வகையைச் சேர்ந்தது. சிவப்பு அரிசியை அதன் மேல் தோலுடன் சாப்பிடும் போது நமக்கு கூடுதலாக மெக்னீஷியம், மேங்னீஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் கிடைக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு வழிவகை செய்கிறது. வெள்ளை அரிசியை பட்டை தீட்டும் போது, இந்த சத்துக்கள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விடுகிறது. தானிய வகைகளில் வைட்டமின் இ அதிகமாக இருப்பது சிவப்பு அரிசியில் தான். இதேபோல், நார்ச்சத்து இதில் அதிகப்படியாக உள்ளது.
இதில் இருக்கும் மாவுச் சத்து, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதில் இருக்கும் மினரல்கள் அனைத்தும் நம் முடி, பற்கள், சருமம், எலும்பு, தசை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
Advertisment
Advertisements
டைப் 2 டைபட்டிஸ் கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி ஏற்றது என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். சிவப்பு அரிசியில் தோசை செய்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும். அதன்படி, இரண்டரை கப் சிவப்பு அரிசிக்கு, அரை கப் உளுத்தம் பருப்பு என்ற விகிதத்தில் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த மாவை புளிக்க வைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
எனவே, சாதாரண வெள்ளை அரிசியில் தோசை உள்ளிட்ட உணவுகளை செய்து சாப்பிடுவதை விட, சிவப்பு அரிசியை இவ்வாறு பயன்படுத்தினால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.