பச்சையாக சின்ன வெங்காயம்... இதய நோய் மாத்திரைக்கு சமம் இது: டாக்டர் கார்த்திகேயன்
சின்ன வெங்காயத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இருதய நோய்க்கு இது மருந்தாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன வெங்காயத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இருதய நோய்க்கு இது மருந்தாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சின்ன வெங்காயத்தில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது வாயில் துர்நாற்றம் வீசுவதாக சிலர் கூறுகின்றனர். இதனை தடுக்க சின்ன வெங்காயத்தை சாப்பிட்டதும் சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
100 கிராம் சின்ன வெங்காயத்தில் சுமார் 82 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. இது தவிர 1.2 சதவீதம் புரதச் சத்தும், 11 சதவீதம் மாவுச் சத்தும், 47 மில்லி கிராம் கால்சியம், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவையும் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் இதில் நிறைந்து இருக்கிறது.
இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தினசரி இரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். ஏனெனில், இதில் இரும்புச் சத்தும் இருப்பதால், இரத்த சோகையை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய நோய் பிரச்சனை இருப்பவர்களும், இரத்த அழுத்தம் இருப்பவர்களும் தினமும் இரண்டு சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இதில் இருக்கும் பல்வேறு சத்துகள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. சின்ன வெங்காயத்தில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் ஃப்ளவனாயிடு சத்துகளும் இருக்கின்றன. அலர்ஜி, ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களும் சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். பச்சையாக இருக்கும் சின்ன வெங்காயத்தில் ஆர்கானிக் சல்ஃபர் அதிகமாக உள்ளது.
இது இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்க உதவி செய்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே, சின்ன வெங்காயம் இருதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு சமமானது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.