வெயிலை தாங்க 3 பழங்கள் முக்கியம்; ஆனால் இந்த பாதிப்பு இருந்தால் கவனம்; டாக்டர் கார்த்திகேயன்
வெயில் காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். எனினும், சிறுநீரக செயலிழப்பு இருப்பவர்கள் மட்டும் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் நம் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாம் சாப்பிட வேண்டிய முன்று முக்கியமான பழங்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிறுநீரக செயலிழப்பு இருப்பவர்கள் மட்டும் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
வெயிலின் காரணத்தால் சருமம் தான் முதலில் பாதிக்கப்படும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சருமத்தை பாதுகாக்கும் தன்மை தக்காளியில் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தக்காளியில் லைக்கோபின் என்ற அன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
தக்காளியில் ஆக்ஸலேட் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகக் கூடும் என்று கூறுகின்றனர். ஆனால், இது தவறான புரிதல் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சுமார் 100 கிராம் தக்காளியில் 5 மில்லி கிராம் தான் ஆக்ஸிலேட் இருக்கிறது. இவை பாதிப்பை ஏற்படுத்தாது. தக்காளியில் பொட்டாஷியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது. இவை சிறுநீரகம் மற்றும் இருதயத்திற்கு நல்லது.
இதேபோல், வெயில் காலத்தில் தர்பூசணி பழமும் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. இவை சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இதேபோல், உடல் உறுப்புகளில் உருவாகும் இன்ஃப்ளமேஷனை தடுக்கவும் தர்பூசணி பயன்படுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு பின்னர் தர்பூசணி சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும்.
Advertisment
Advertisements
இவற்றை போல வெள்ளரிக்காய்களையும் வெயில் காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். இதில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. வெயில் காலத்தில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். வெள்ளரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால், இதனை சாப்பிடுவது செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும். குறிப்பாக, கரையும் நார்ச்சத்து இதில் நிறைந்திருக்கிறது.
இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை சிறிய துண்டுகளாக வெட்டி கண்களின் மேல் வைக்கலாம். இது கண்கள் வறண்டு போவதை தடுத்து, கருவளையும் உருவாவதை குறைக்கிறது.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.