கேன்சரை தடுக்கும் வெற்றிலை… ஆனால் இப்படித் தான் சாப்பிடணும்; டாக்டர் கார்த்திகேயன்

வெற்றிலையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு சாப்பிட்டால் பலன் அளிக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெற்றிலையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு சாப்பிட்டால் பலன் அளிக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Betel leaf

செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், வெற்றிலையுடன் சேர்த்து பெரும்பாலானவர்கள் சாப்பிடும் பாக்கு, புகையிலை போன்ற பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் இருக்கிறது.

Advertisment

எனினும், வெற்றிலையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால் அதன் மூலமாக பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் வெற்றிலைக்கு இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். 

ஏனெனில், வெற்றிலையில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துகள் போன்றவை இருக்கின்றன. மேலும், இருதய நோய் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெற்றிலைக்கு இருக்கிறது. சிறுநீர் தொற்று ஏற்படாமல், அதனை சீராக வெளியேற்றும் தன்மையும் வெற்றிலைக்கு இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளும் வெற்றிலையை சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். ஆனால், புகையிலை போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்து, வெற்றிலையை மட்டும் தனியாக சாப்பிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். அதன்படி, ஒரு நாளைக்கு ஒரே ஒரு வெற்றிலை என்ற கணக்கில் சாப்பிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - Doctor Karthikeyan Youtube Channel

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

betel leaves

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: