தொண்டையின் இருபுறமும் காணப்படும் டான்சில்ஸ் எனப்படும் சிறிய சுரப்பிகள், உடலுக்குள் நுழையும் கிருமிகளைத் தடுக்க உதவுகிறது. உணவுடன் உள்ளே செல்லும் கிருமிகளை எதிர்த்து, அவை வளராமல் அழிக்கவும் உதவுகின்றன. சில நேரங்களில், கிருமிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது, டான்சில் வீங்கி தொண்டை வலியை ஏற்படுத்துகிறது.
Advertisment
குளிர்ச்சியான உணவு, பானங்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை உட்கொள்வது டான்சிலைடிஸ் நோய்க்கு வழிவகுக்கும். இதனை எப்படி வீட்டில் இருந்து சரிசெய்யலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்க்கலாம். வீக்கமடைந்த டான்சிலை டார்ச்லைட் மூலம் பார்த்தால் சிவந்து போயிருக்கும், சில நேரங்களில் மஞ்சள் நிறத்தில் சீழ் கட்டிய புள்ளிகள் தெரியும்.
வீட்டில் செய்யக்கூடிய சிகிச்சைகள்:
1.வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கவும். இதை ஒரு நாளைக்கு நாலு ஐந்து முறை செய்யவும்.
Advertisment
Advertisements
2. இஞ்சி கலந்த தேநீர் அருந்துவது தொண்டைக்கு இதமாக இருக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இதுவும் தொண்டை வலிக்கு நல்லது.
3. ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து, தேன் சேர்த்து குடிக்கலாம். லவங்கப்பட்டையை தண்ணீரில் தேநீர் போல செய்து குடிக்கலாம்.
4. கிராம்பை மென்று சாப்பிடலாம், இது தொண்டைக்கு இதமாக இருக்கும்.
5. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
6. திரிபலா சூரணத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து ஆறவைத்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கவும். இந்த வைத்திய முறைகள் டான்சில் தொந்தரவில் இருந்து நிவாரணம் பெற உதவும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.