சூழலியலில் எளிதாகக் கிடைக்கக்கூடிய நீர்மூலி தாவரம், சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதாக டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார். நீர்மூலி தாவரத்தின் விதைகள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ஈரலில் ஏற்படும் சிறு பாதிப்பையும் குணப்படுத்தி விடுகிறது.
Advertisment
நவீன வாழ்க்கை முறை மற்றும் மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளுக்கு இது ஒரு சிறந்த பாதுகாப்பாக விளங்குகிறது. நீளமான இலைகள், நீல-ஊதா நிற மலர்கள் மற்றும் வெண்மை நிற முட்களைக் கொண்ட இந்த தாவரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகிறது. கல்லீரல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு இது பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமின்றி, நீர்மூலி இரத்த சோகை போன்ற இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. இது உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நன்மை பயக்கும்.
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் நீர்மூலி விதைகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
Advertisment
Advertisements
நீர்மூலி சிறுநீரகக் கற்கள் மற்றும் மூட்டு வலிக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது, மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
நீர்மூலி சாப்பிடும் முறை: ஒரு கிளாஸ் சுடுதண்ணீரில் 2 கிராம் அளவு நீர்மூலி விதை எடுத்து கரைக்கவும். அது ஜெல்லி மாதிரி ஆனால் தூய்மையான நீர்மூலி என்று அர்த்தம். பின்னர் அதை எடுத்து அப்படியே குடிக்கலாம்.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க நீர்மூலி உதவி செய்யலாம். கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்த நீர்மூலி உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.