ஒல்லியா இருக்கீங்களா? இந்த பொடி ஒரு ஸ்பூன் போதும்… உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்; டாக்டர் கார்த்திகேயன்
உடல் எடையை அதிகரிக்க டாக்டர் கார்த்திகேயன் சில டிப்ஸ்களை கூறுகிறார். அதன்படி ஒல்லியாக இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொடியை பற்றி அவர் கூறுகிறார்.
உடல் எடையை அதிகரிக்க டாக்டர் கார்த்திகேயன் சில டிப்ஸ்களை கூறுகிறார். அதன்படி ஒல்லியாக இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொடியை பற்றி அவர் கூறுகிறார்.
ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை கூட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைப்பவர்கள் என்ன சாப்பிட்டும் உடல் எடை அதிகரிக்கவில்லையா? அப்பொ டாக்டர் கார்த்திகேயன் அதற்கு ஒரு புரோட்டின் நிறைண்ந பவுடர் ஒன்றை பற்றி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை நிலக்கடலை பால் பேரிச்சம் பழம் வாழைப்பழம்
முதலில் கொண்டைக்கடலை, நிலக்கடலை இரண்டையும் தனித்தனியே வறுத்து ஆறவைத்து கலந்துகொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆறவைத்த பால், அறைத்த பவுடர், பேரிச்சை, வாழைப்பழம் போட்டு பல்ஸ் மோடில் ஓட்டி குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இந்த பானம் அதிக புரோட்டின் மற்றும் கலோரி சத்துக்களை கொண்டது. கொண்டைக்கடலை மற்றும் நிலக்கடலையில் அதிக அளவு புரதம் உள்ளது, இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. பாலில் கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பேரிச்சம் பழம் இயற்கையான இனிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வழங்குவதன் மூலம் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க முடியும். இது தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. எனினும், ஒரு சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து இந்த பானத்தை உட்கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும்.
இந்த புரோட்டின் பானத்தை குடிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை என்றாலும், உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சிக்கு முன் குடிப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது, அதே நேரத்தில் உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதால் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலை உணவுக்குப் பதிலாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ கூட இதனை உட்கொள்ளலாம்.
இந்த பானத்தில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவை அவரவர் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, இனிப்பு அதிகம் தேவைப்படுபவர்கள் அதிக பேரிச்சம் பழம் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், வாழைப்பழத்தின் அளவையும் கூட்டிக் குறைக்கலாம். புரதத்தின் அளவை அதிகரிக்க விரும்பினால், பவுடரின் அளவை சற்று அதிகமாக்கிக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.