/indian-express-tamil/media/media_files/2025/07/06/akshayan-2025-07-06-18-17-50.jpg)
கண் எரிச்சல் என்பது இன்று பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கே. ஆர் அக்ஷயன் கூறுகிறார். ஆனால், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் கண் எரிச்சல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் அதை எப்படி சரிசெய்யலாம் என்று காஸ்மோ ஹெல்த் யூடியூப் பக்கத்தில் டாக்டர் கே. ஆர் அக்ஷயன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
கண் எரிச்சலுக்கான காரணங்கள்:
அதிகப்படியான கண் வேலை: இரவு முழுவதும் விழித்திருப்பது, கணினி அல்லது மொபைலில் அதிக நேரம் வேலை செய்வது, கேம் விளையாடுவது போன்ற காரணங்களால் கண்ணில் உள்ள திரவம் வறண்டு, எரிச்சலை ஏற்படுத்துகிறது.
உள் உறுப்புகளின் தாக்கம்: நமது சிறுநீரகமும் கல்லீரலும் கண்ணுக்கு மிக முக்கியமான உறுப்புகள். இவை அதிக சூடாக இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ கண் எரிச்சல் ஒரு தீராத பிரச்சனையாக மாறலாம். உதாரணமாக, மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு கண்கள் சிவப்பாவதும், சிறுநீரக நோயாளிகளுக்கு கண் அழுத்தம், பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதும் இதன் நேரடித் தொடர்பைக் காட்டுகிறது. கண் சிவப்பது, கண்ணில் நீர் வடிவது, கண் இமைகள் துடிப்பது போன்ற அறிகுறிகள் கண்ணின் பிரச்சனை மட்டுமல்ல, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் அதிகப்படியான வெப்பம் அல்லது பிரச்சனையின் வெளிப்பாடாகும்.
கண் எரிச்சலை சரிசெய்யும் வழிகள்:
கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை குளிர்விப்பதன் மூலம் கண் எரிச்சலை சரிசெய்யலாம்.
கணினி/மொபைல் பயன்பாடு: இரண்டு மணி நேரம் கணினியில் வேலை செய்த பிறகு, 10 நிமிடங்கள் வெளியே சென்று தூரத்தில் உள்ள பசுமையான இடங்களை அல்லது பொருட்களைப் பார்க்கவும். இது கண்களுக்கு ஓய்வு அளித்து, பார்வைத் திறனை மேம்படுத்தும்.
கண் பயிற்சிகள்: அருகில் உள்ள பொருட்களைப் பார்ப்பதுடன், தூரத்தில் உள்ள தென்னை மரம் போன்ற பசுமையான இடங்களை தினமும் பயிற்சி போலப் பார்ப்பது கண்களுக்கு நல்லது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்தாலும், பயிற்சியின் மூலம் தெளிவு பெறும்.
குறிப்பாக கருப்பு பன்னீர் திராட்சையை காலை உணவாக அரை கிலோ அளவில் ஜூஸாகவோ அல்லது அப்படியேவோ ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்வது கண் எரிச்சல் பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும். இது கண்களுக்கு மிகவும் நல்லது.
கண் குளியல்:
ஒரு டப்பில் சுத்தமான போர் வாட்டர் (குளோரின் கலக்காதது) எடுத்துக்கொள்ளவும். முகத்தை முழுமையாக தண்ணீரில் மூழ்கடித்து, காதுகள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும். கண்களைத் திறந்து, நாக்கை மெதுவாக அலசவும்.
ஆரம்பத்தில் கண் எரிச்சல் ஏற்பட்டாலும், படிப்படியாக வெப்பம் வெளியேறி எரிச்சல் குறையும். மூச்சை அடக்கி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மூழ்கி இருந்துவிட்டு எழவும்.
இந்த செயல்முறையை 6 முதல் 10 முறை வரை செய்யலாம். கண் குளியல் செய்த பிறகு கண்கள் சிவப்பாகத் தெரிந்தாலும், சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
இது மூளையுடன் இணைக்கப்பட்ட 5 லட்சம் நரம்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண்களை புத்துணர்ச்சியடையச் செய்யும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு: கண் எரிச்சல் உள்ள சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த கண் குளியலைச் செய்வதன் மூலம் சர்க்கரை அளவு படிப்படியாகக் குறையும்.
யார் செய்யலாம்: 8-10 வயது குழந்தைகள் முதல் 99 வயது முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். மூக்கு மற்றும் காதுக்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் குளிக்கும் முன் அல்லது மாலையில் வெளியே சென்று வந்த பிறகு செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது சிறந்தது. குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.