பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில் பெஸ்ட் உணவு இதுதான்; காபி, டீ வேண்டாம்: டாக்டர் லாவண்யா
பெண்களுக்கு ஏற்படும் பீரியட்ஸ் வலியை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவு முறை குறித்து மருத்துவர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு பீரியட்ஸ் ஏற்படும் போது கர்ப்பப்பை சுருங்கி விரிவடையும். இந்த சுழற்சியின் போது வலி ஏற்படும் என மருத்துவர் லாவண்யா தெரிவித்துள்ளார். பெரும்பாலான நேரத்தில் இவை தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
ஆனால், சிலருக்கு இவை கடுமையாக இருக்கும். மேலும், கர்ப்பப்பையிலும் இவை சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் கூறுகிறார். சாதாரணமாக பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலேயே இந்த வலி தொடங்கி விடும். அடுத்த சில நாட்களில் இவை குறையத் தொடங்கும். அந்த வகையில் இந்த வலி தாங்கிக் கொள்ளக் கூடிய ரீதியில் இருந்தால் அப்பெண் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம் என மருத்துவர் லாவண்யா கூறுகிறார்.
இரண்டாவது கட்டத்தில், கர்ப்பப்பையில் சதை வளருதல், கிருமி தொற்று போன்றவற்றால் வலி சிலருக்கு கடுமையாக இருக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பீரியட்ஸ் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வலி ஏற்படும். பீரியட்ஸ் நின்ற பின்னரும் ஒரு வாரத்திற்கு இந்த வலி இருக்கக் கூடும். எனவே, இந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் லாவண்யா அறிவுறுத்தியுள்ளார்.
வாந்தி, மயக்கம், கால் வலி, வயிற்றுப் போக்கு போன்றவை இதற்கான அறிகுறியாக இருக்கும். அதன்படி பீரியட்ஸ் நேரத்தில் சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். சில வகை உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிடலாம். இதேபோல், பப்பாளி, கீரை வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். பீரியட்ஸ் நேரத்தில் சீரகத் தண்ணீர் குடிக்கலாம் என்றும் மருத்துவர் லாவண்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதிகமாக உப்பு, சர்க்கரை, எண்ணெய், காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை இந்த நேரத்தில் தவிர்த்து விடுவது நல்லது. காபி, டீ போன்றவற்றை இந்நேரத்தில் தவிர்த்து விடலாம். இவை உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குறைத்து விடக்கூடும். இது தவிர சுடுதண்ணீரில் குளிப்பது, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ளுதலும் பீரியட்ஸ் வலியை குறைக்கும் என மருத்துவர் லாவண்யா பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.