/indian-express-tamil/media/media_files/2025/04/21/C88VfiYVn3WUIGqzKL4u.jpg)
நரம்புகள் என்பவை நரம்புச் செல்களின் (நியூரான்கள்) நீளமான வெளிநீட்டங்களான நரம்பிழைகள் (ஆக்சான்கள்) பல ஒன்றாகச் சேர்த்து மூடப்பட்ட கட்டுக்களாக அமைந்துள்ளன. அவை நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். நரம்புகள் மூலம் உடலின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
நரம்புகள் நரம்பிழைகளாக அதாவது ஆக்சான்கள் நரம்புச் செல்களின் நீளமான இழைகள் ஆகும். இவற்றில் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் தவிர, உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் புற நரம்புகள் ஆகும். அதேபோல மூளையிலிருந்து நேரடியாக புறப்படும் 12 ஜோடி நரம்புகள் மண்டை நரம்புகள் ஆகும்.
நரம்புகள் 3 வகைப்படும். அவை உணர்வுகளை மூளைக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி நரம்புகள், தசைகளை இயக்கும் இயக்க நரம்புகள், உடலின் சில செயல்பாடுகளை தானாகவே கட்டுப்படுத்தும் சுயாதீன நரம்புகள் ஆகும்.
இதுமட்டுமின்றி நரம்புகளின் முக்கியத்துவம் நம் உடலில் அதிகம். அவை என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
1. உடலின் இயக்கங்கள் - தசைகளை இயக்கி உடல் இயக்கங்கள் நிகழ உதவுகின்றன.
2. உணர்வுகளைப் பரிமாறுதல் - வெளிப்புறத் தூண்டல்களை உணர்ந்து மூளைக்கு அனுப்புவது.
3. உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் - ஹார்மோன்கள் மற்றும் பிற இரசாயன பொருட்களை உற்பத்தி செய்து உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. இவையே நரம்புகளின் முக்கியத்துவம் ஆகும்.
இந்த நரம்புகள் சேதமடைந்தால், வலி, உணர்வின்மை, தசை பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். நரம்புகள் சேதமடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நரம்புகளை பலப்படுத்த வைட்டமின் பி 12 போன்ற சில உணவுகள் உதவுவதாக டாக்டர் மாயன் செந்தில் குமார் லைஃப்டியூனர் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
1. கொத்தவரங்காய் -பச்சையாக சாப்பிடலாம். அதாவது ஜூஸ் மாதிரி மிக்ஸியில் அடித்து வடிகட்டாமல் குடிக்கவும்.
2. கருப்பு பேரிச்சம் பழம் - காலை, மதியம், மாலை, இரவு நான்கு வேளையும் 2 பேரிச்சை சாப்பிடலாம்.
தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தேகம் வலுபெறும் என்றும் கூறுகிறார். தோல் பளபளப்பாகவும் இருக்கும். வெண் புள்ளிகள் கூட மறையும். நரம்புகள், தசை நார்கள், உடல் ஆரோக்கியம், உடல் சோர்வு இருக்காது, நல்ல இல்லறம் இருக்கும், கண் பார்வை போன்ற எல்லாவற்றிற்கும் உதவும். 10 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.