இதுக்கு பேரு சர்க்கரை கொல்லி... 2 இலை மென்றால் இனிப்பே தெரியாது; இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் முருகேசன்
இந்த இலையை மென்று சாப்பிட்ட பின்னர் சர்க்கரை எடுத்துக் கொண்டால் அதன் சுவையே தெரியாது என்று மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார். இத்துடன் ஆவாரம் பூ, நாவல் விதை உள்ளிட்டவற்றை சேர்த்து மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இலையை மென்று சாப்பிட்ட பின்னர் சர்க்கரை எடுத்துக் கொண்டால் அதன் சுவையே தெரியாது என்று மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார். இத்துடன் ஆவாரம் பூ, நாவல் விதை உள்ளிட்டவற்றை சேர்த்து மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயின் பாதிப்பு இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்கிறது. அதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படும் மூலிகைகள் குறித்து மருத்துவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். இவை ஏற்படுவதற்கான காரணத்தையும் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுகுறிஞ்சான் மூலிகையின் மூலமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
உதாரணமாக, இந்த இலையை மென்று சாப்பிட்ட பின்னர் சர்க்கரை எடுத்துக் கொண்டால் அதன் சுவையே தெரியாது என்று மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார். இத்துடன் ஆவாரம் பூ, நாவல் விதை உள்ளிட்டவற்றை சேர்த்து சிறுகுறிஞ்சான் மூலிகையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
சிறுகுறிஞ்சான் மூலிகையை சிறிய நெல்லிக்காய் அளவில் அரைத்து தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர உணவுக் கட்டுப்பாட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் முருகேசன் வலியுறுத்தியுள்ளார். எனவே, இனிப்பு சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
அந்த வகையில், இவ்வாறு இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளில் இருந்து பல்வேறு நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என்று அறிய முடிகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.