நீர்த்துப் போன விந்துவை பசையாக மாற்றும்... இந்த விதையை இப்படி சாப்பிட்டு வாங்க: டாக்டர் முருகேசன்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்கள் அடங்கிய பட்டியலை மருத்துவர் முருகேசன் குறிப்பிட்டுள்ளார். அதனை இக்குறிப்பில் காணலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்கள் அடங்கிய பட்டியலை மருத்துவர் முருகேசன் குறிப்பிட்டுள்ளார். அதனை இக்குறிப்பில் காணலாம்.
சமீப நாட்களில் சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்களில் ஆண்மைக் குறைவு பிரச்சனையால் நிறைய பேர் தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, விந்தணுக்களில் அவர்களுக்கு பிரச்சனை இருப்பதாக அவர் கூறுகிறார்.
Advertisment
இது தவிர சுமார் 25 வயது நிரம்பிய இளைஞர்களும் திருமணத்திற்கு முன்பாக ஆண்மையை அதிகரிக்கும் மருந்துகளை கேட்டு தன்னிடம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி சரியாக செய்யாமல், உணவு முறையை பின்பற்றாமல் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்று மருத்துவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கிழங்கு வகைகள், சர்க்கரை அதிகமாக இருக்கும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என்று சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர சத்தான இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் முருகேசன் அறிவுறுத்துகிறார்.
உதாரணத்திற்கு, முருங்கை விதையில் நீர்த்துப் போன விந்துவை பசையாக மாற்றக் கூடிய ஆற்றல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளம் பழ விதைக்கு இருக்கிறது. மேலும், பாதாம் பருப்பு, கொண்டை கடலை, நிலக்கடலை போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இதேபோல், எருமை மோர் குடித்தால் ஆண்மையை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர் முருகேசன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது போன்ற பொருட்களை சாப்பிடும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் சித்த மருத்துவத்தில் இருப்பதாக கூறும் மருத்துவர் முருகேசன், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
நன்றி - Dr Sarav Dhanvandhiri Vaidyasala Theni Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.