கிராம்பு தண்ணீரை கொதிக்க வைத்து... ஒரு வாரம் இதை செய்தால் இவ்ளோ நன்மை: டாக்டர் மைதிலி
கிராம்பில் இருக்கக் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கிராம்புகளில் பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இந்த ஊட்டச்சத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது கண் பார்வை திறன் அதிகரிக்கும். இதேபோல், யுஜினால் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருளும் கிராம்பில் இருக்கிறது. இவை நீரிழிவு நோய் பாதிப்பு உருவாவதை குறைக்கிறது.
Advertisment
கிராம்பு எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் இன்சுலின் அளவும் சீராக பராமரிக்கப்படும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார். மேலும், தொடர்ச்சியாக கிராம்பு உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் பாதிப்பும் குறைவாக இருக்கும். உடம்பில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மை கிராம்புக்கு இருக்கிறது.
இதேபோல், கல்லீரலை பல விதமான பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, அதனை சீராக இயங்க வைப்பதில் கிராம்பின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இவை கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி, அவற்றை தூய்மைப்படுத்துகிறது. கிராம்பு உட்கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்டும் பாதிப்பும் குறைவு தான்.
செரிமான மண்டலத்தை சீராக்க கிராம்பு உதவுகிறது. மேலும், தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் கிராம்பை மருந்தாக பயன்படுத்தலாம். அதன்படி, இரண்டு கிளாஸ் தண்ணீரில் 3 கிராம்புகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் ஒரு கிளாஸ் அளவிற்கு வற்றியதும் வடிகட்டி குடித்து விடலாம்.
Advertisment
Advertisements
கிராம்பு கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். அந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை பின்பற்றலாம். பல் வலியை குறைக்கும் தன்மையும் இதில் காணப்படுகிறது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க கிராம்பு பயன்படுகிறது.
இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு மிளகு மற்றும் மூன்று கிராம்புகளை இடித்து பொடியாக்கி சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைக்கும் போது, கால் ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். கொதிக்க வைத்த நீர் ஒரு கிளாஸாக வற்றியதும், காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும், மாலை நேரத்தில் டீ மற்றும் காபிக்கும் மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை ஆரோக்கியமான வகையில் குறைக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.