உஷார் மக்களே... வேர்க்கடலை இப்படி சாப்பிட்டா கேன்சர் அபாயம்: டாக்டர் மைதிலி
வேர்க்கடலையில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவற்றை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேர்க்கடலையை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது தான் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், எண்ணெய்யில் பொறித்து அல்லது ஓடு உடைத்து பச்சையாக வேர்க்கடலையை சாப்பிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
வேர்க்கடலை பச்சையாக இருக்கும் போது அதில் பூஞ்சைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து வெளியாகும் நச்சு நம் வயிற்றுப் பகுதியில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, வேர்க்கடலையை கட்டாயமாக வேகவைத்து தான் சாப்பிட வேண்டும் என மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
வேர்க்கடலையில் இருக்கும் அமினோ அமிலங்கள் நம் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகின்றன. மேலும், மூளை நரம்புகளை தூண்டக் கூடிய செரோடினினை சீராக பராமரிக்க வேர்க்கடலை பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
வைட்டமின் பி 3 என்ற ஊட்டச்சத்தும் வேர்க்கடலையில் நிறைந்திருக்கிறது. இவை ஞாபக சக்தியை அதிகப்படுத்த பயன்படுகிறது. வயதான பின்பு ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலையில் இருக்கும் சத்திகளில் காணப்படுகிறது என மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் ஆகிய இரு ஊட்டச்சத்துகளும் வேர்க்கடலையில் அதிகமாக இருக்கிறது. இதனால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேர்க்கடலை உதவுகிறது. வேர்க்கடலையில் இருந்து இரத்தத்தில் சேரக்கூடிய சர்க்கரையின் அளவு குறைவு தான். எனவே, நீரிழிவு நோயின் அபாயத்தையும் இது குறைக்கிறது.
பாலிஃபீனால் போன்ற ஊட்டச்சத்துகளும் வேர்க்கடலையில் அதிகமாக இருக்கிறது. இதனால், புற்றுநோய் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் கால்சியமும், இரத்த சோகை நோய்களை தடுக்கும் இரும்புச் சத்தும் வேர்க்கடலையில் இருக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாகும் தன்மையையும் வேர்க்கடலை தடுக்கிறது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வேர்க்கடலையை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.