இந்த அரிசிக்கு பெயர் 'இந்தியன் வயாகரா'; இப்படி சாப்பிட்டுப் பாருங்க: டாக்டர் மைதிலி
கருங்குறுவை அரிசியின் நன்மைகள் குறித்தும், அவை நம் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்றும் மருத்துவர் மைதிலி விவரித்துள்ளார். இவை ஆண்மை குறைபாட்டை தடுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
கருங்குறுவை அரிசியின் நன்மைகள் குறித்தும், அவை நம் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்றும் மருத்துவர் மைதிலி விவரித்துள்ளார். இவை ஆண்மை குறைபாட்டை தடுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
கருங்குறுவை அரிசியில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, இந்த அரிசியை ஆங்கிலத்தில் 'Indian Viagra Rice' என்று கூறுகிறார்கள் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இந்த அரிசியை ஆண்கள் தங்கள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் போது, ஆண்மை குறைபாட்டை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
மேலும், இவை நரம்பு மண்டலத்தை சீராக்கி, ஆண்களுக்கு ஏற்படக் கூடிய தற்காலிக ஆண்மைக் குறைவை சரி செய்வதாகவும் மருத்துவர் மைதிலி கூறுகிறார். இந்த அரிசி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. எனவே, குழந்தை இன்மை பிரச்சனைக்காக சிகிச்சை பெறும் ஆண்கள், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த கருங்குறுவை அரிசியை பெண்களும் சாப்பிடலாம். இவை கரு உண்டாகும் வாய்ப்பை பெண்களிடையே அதிகப்படுத்துகிறது. இந்த வகையான அரிசி நீரிழிவு நோய் பாதிப்புகளையும் தடுக்கிறது. இந்த அரிசியை வேக வைத்தும் சாப்பிடலாம். அல்லது பனியாரம் போன்ற பொருட்களை தயாரித்தும் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
இவை இரத்தத்தை சுத்தப்படுத்துவதால் சில சரும பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களும் இதனை அவசியம் எடுத்துக் கொள்ளலாம். இவை தவிர யானைக்கால் பாதிப்பை இது குறைக்கிறது. கருங்குறுவை அரிசியை தண்ணீரில் பால் சேர்த்து குழைவாக வேக வைக்க வேண்டும். பின்னர், அரிசி சூடாக இருக்கும் போதே, இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து இதனை காலை உணவாக சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து 30 முதல் 40 நாட்களுக்கு இந்த அரிசியை சாப்பிட்டால், யானைக்காலின் பாதிப்பு குறையும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.