86% நீர்ச்சத்து இருக்கும் பழம் இதுதான்; உடல் எடை குறைய இப்படி சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது எவ்வாறு உதவுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது எவ்வாறு உதவுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆரஞ்சு பழத்தை தினசரி சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய பல்வேறு நன்மைகள் குறித்த தகவல்களை மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார். மேலும், இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதன் மூலமாக, அன்றைய நாளுக்கு தேவையான 93 சதவீத வைட்டமின் சி ஊட்டச்சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும், இரும்பு ஊட்டச்சத்தை நம் உடல் முழுமையாக உறிந்து கொள்வதற்கு இது பயன்படுகிறது.
வைட்டமின் சி போதுமான அளவிற்கு நம் உடலில் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை குறைக்க முடியும். மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோனை சீராக பராமரிக்கும் தன்மை இதற்கு இருக்கிறது. ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் அன்றைய தினத்திற்கு தேவையான கால்சியம் சத்தில் 6 சதவீதம் கிடைத்து விடுகிறது. இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால், இதனை சாறு எடுத்து குடிக்கும் போது அதனை வடிகட்டி விடுவதால், நார்ச்சத்து நம் உடலுக்கு முழுவதுமாக கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக பழமாக சாப்பிட வேண்டும். இது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.
Advertisment
Advertisements
மேலும், உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகாமல் தடுப்பதற்கும் இது பயன்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைத்து விடுகிறது. இது தவிர ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருப்பதற்கு ஆரஞ்சு பழம் உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இதில் சுமார் 86 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. இது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த ஆரஞ்சு பழத்தை அன்றாடம் நாம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.