புகையால் நுரையீரல் பாதிப்பு? தக்காளி சாலட், தக்காளி சட்னி சாப்பிடுங்க: டாக்டர் மைதிலி
தக்காளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், இதனை நம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைகோபின் என்ற முக்கியமான வேதிப்பொருள் தக்காளியில் இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இவை உணவுகளில் சிவப்பு நிறத்தை கொடுக்கக் கூடிய அன்டி ஆக்சிடென்ட். இவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
இதேபோல், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக கூறப்படுகிறது. தக்காளியில் வைட்டமின் கே1 என்கிற ஊட்டச்சத்தும் இருக்கிறது. இது, எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவி செய்கிறது. ஒரு தக்காளி எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு நாளுக்கு தேவையான சுமார் 30 சதவீத வைட்டமின் சி ஊட்டச்சத்து கிடைக்கிறது.
இவை நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஃபோலேட் எனப்படும் சத்தும் தக்காளியில் இருக்கிறது. மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் ஆகிய இரண்டும் தக்காளியில் அதிகமாக இருக்கிறது. இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தினசரி உணவுடன் தக்காளி எடுத்து வந்தால் தலை முடி உதிர்வு பிரச்சனை குறைந்த, முடியின் வளர்ச்சி அடர்த்தியாகும். தக்காளியை அரைத்து ஃபேஸ்பேக்காக பயன்படுத்தினால் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.
Advertisment
Advertisements
இது தவிர தக்காளியை தினசரி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய நுரையீரல் பாதிப்பையும் தக்காளி குறைக்கிறது. எனவே, தக்காளி சாலட் அல்லது சட்னி என ஏதாவது ஒரு வகையில் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தும் இருக்கிறது. இது மலச்சிக்கலை தடுக்கிறது. ஒரு தக்காளியில் 94 சதவீதம் வரை நீர்ச்சத்து இருக்கிறது. இது உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது.
இந்த அளவிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த தக்காளியை, அவசியம் நம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.