கோடை காலத்தில் மலிவா கிடைக்கும் இந்தப் பழம்... 4 முக்கிய நோயை தடுக்கும் வேதிப் பொருள் இருக்கு: டாக்டர் மைதிலி
கோடை காலத்தில் தர்பூசணி பழத்தை நாம் அவசியம் சாப்பிட வேண்டும் என மருத்துவர் மைதிலி பரிந்துரைத்துள்ளார். மேலும், அதன் நன்மைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோடை காலத்தில் தர்பூசணி பழத்தை நாம் அவசியம் சாப்பிட வேண்டும் என மருத்துவர் மைதிலி பரிந்துரைத்துள்ளார். மேலும், அதன் நன்மைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோடை காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், நீர்ச்சத்து குறைபாடு தொடங்கி பல்வேறு விதமான நோய்கள் கோடை காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
Advertisment
அதற்காக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தேவையான அளவு சாப்பிட வேண்டும். அந்த வகையில் தர்பூசணி பழத்தை கோடை காலத்தில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதனடிப்படையில் தர்பூசணியின் முக்கியமான பயன்கள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
தர்பூசணி பழத்தில் லைகோப்பின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதாக மருத்துவர் மைதிலி கூறியுள்ளார். நான்கு முக்கியமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை இந்த லைகோப்பின் குறைக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கண் பார்வை தொடர்பான அத்தனை நோய்களையும் குறைக்க தர்பூசணி பழம் உதவுகிறது. உதாரணத்திற்கு, மாலைக் கண் நோய், கண் புரை, கண் அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயத்தை தர்பூசணியில் உள்ள லைகோப்பின் குறைக்கிறது என்று மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார். இது கண் பார்வையை கூர்மையாக்கவும் உதவுகிறது.
Advertisment
Advertisements
இதேபோல், எலும்பில் ஏற்படக் கூடிய நோய் அபாயத்தையும் தர்பூசணி குறைக்கிறது. இது மட்டுமின்றி எலும்புகள் அடர்த்தியாக இருப்பதற்கு இவை உதவி செய்கின்றன. எலும்புகளின் உறுதித் தன்மையையும் லைகோப்பின் மேம்படுத்துகிறது. எலும்புகள் உறுதியாக இருந்தால், மூட்டு வலி தொடர்பான பிரச்சனை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
அனைத்து விதமான புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ப்ராஸ்டேட் கேன்சர் வருவதை எதிர்த்து போராடும் குணம் லைகோப்பினுக்கு இருக்கிறது. அடுத்ததாக மாரடைப்பு வரும் வாய்ப்பையும் தர்பூசணி குறைக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.