பூண்டு உரித்து அப்படியே சாம்பார், ரசத்தில் போடுறீங்களா? நீங்க பண்றது தப்பு: டாக்டர் மைதிலி விளக்கம்
பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்தும், அவை நம் உடலில் எந்த அளவிற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும் மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
நம் அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால் பல்வேறு மருத்துவ நலன்களை பெற முடியும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
பூண்டை சாம்பார், ரசம் ஆகியவற்றில் சேர்த்து பயன்படுத்தும் போது, உரித்த உடனேயே போட்டு விடக் கூடாது. அவற்றை சிறிது நேரம் காற்று படும் படி வைக்க வேண்டும். அப்போது தான் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார். பூண்டில் இருந்து அலிசின் வேதிப்பொருள் உருவாவதற்காகவே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
2 பல் பூண்டு எடுத்து அதன் தோலை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அதன் பின்னர், இந்த பூண்டை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் கழித்து இந்த பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரில் ஒரு கொதி வந்ததும், அதனை வடிகட்டி குடித்து விடலாம்.
இந்த பூண்டு நீரை காலை எழுந்ததும் பல் துலக்கிய பின்னர் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என மருத்துவர் மைதிலி கூறுகிறார். ஆனால், அஸிடிட்டி, வாயு தொல்லை இருப்பவர்கள் பூண்டு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்காமல், சாப்பிட்ட பின்னர் சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் குடிக்கலாம்.
Advertisment
Advertisement
இவ்வாறு பூண்டு நீரை தினசரி குடித்து வந்தால் நம் இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், உடம்பில் இருக்கக் கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். உடல் எடையை குறைக்கவும் பூண்டு நீர் பயன்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் இது மருந்தாக அமைகிறது. மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் பூண்டு நீர் பயன்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.