காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் கால் ஸ்பூன் இந்தப் பொடி... சுகர், அஜீரண பிரச்சனைக்கு பை: டாக்டர் மைதிலி
திப்பிலி பொடியின் மருத்துவ பயன்கள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். இவை சர்க்கரை நோய் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
திப்பிலி மூலிகையின் பொடியை பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அந்த வகையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் இதில் இருக்கிறது.
Advertisment
குறிப்பாக, கால் டீஸ்பூன் திப்பிலி பொடியை ஒரு கிளாஸ் சுடுதண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என மருத்துவர் மைதிலி பரிந்துரைக்கிறார். இவ்வாறு 45 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்.
பூஞ்சை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மையும் திப்பிலியில் காணப்படுகிறது. இதேபோல், ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான பிரச்சனைக்கும் இவை மருந்தாக பயன்படுகிறது. அரை டீஸ்பூன் திப்பிலி பொடியை, கால் டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், சுவாச பிரச்சனைக்கு மருந்தாக பயன்படும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கும். இது போன்ற செரிமான தொல்லைகளுக்கு திப்பிலி மருந்தாக செயல்படுகிறது. இவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை பராமரிக்கிறது.
Advertisment
Advertisements
பெண்களுக்கான மாதவிடாய் சுழற்ச்சியை சீராக வைப்பதற்கு திப்பிலி பொடி பயன்படுகிறது. ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை திப்பிலி அதிகப்படுத்துகிறது. தற்காலிக ஆண்மைக் குறைபாடு இருக்கும் ஆண்களும் திப்பிலி பொடியை குடித்து அப்பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளையும் இயற்கையான முறையில் குணப்படுத்தும் ஆற்றல் திப்பிலி மூலிகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் அனைத்தும் திப்பிலியில் நிறைந்து காணப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.