நுரையீரல் கழிவுகளை வெளியேற்றும்… சுகரை கண்ட்ரோலில் வைக்கும்; எந்த காய் தெரியுமா? டாக்டர் மைதிலி விளக்கம்
கண்டங்கத்திரியில் இருக்கும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். இது நம் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கண்டங்கத்திரியில் இருக்கும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். இது நம் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கண்டங்கத்திரி சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இது இயற்கையாகவே அதிகப்படியான சளியை வெளியேற்ற உதவுகிறது. இது சைனசிடிஸ் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனைகளை குறைக்கிறது. இது நுரையீரலில் குவிந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றி, நுரையீரலை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
கண்டங்கத்திரி, கல்லீரலை பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது சரியான எடையை பராமரிக்க உதவுகிறது மற்றும் அஜீரணத்தின் வாய்ப்புகளை குறைக்கிறது. இது மலச்சிக்கலையும் போக்குகிறது என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதன் மூலம், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை கண்டங்கத்திரி குறைக்கிறது. இது உடலில் எந்த வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது பெண்களுக்கு மார்பகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
கண்டங்கத்திரி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. கண்டங்கத்திரி பொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்க பயன்படுவதாகவும் மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.