மாரடைப்பை தடுக்கும் வல்லமை... ஆனா இந்த உணவு பொருளை இவங்க மட்டும் சாப்பிடக் கூடாது: டாக்டர் மைதிலி
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் இது பயன்படுகிறது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது டைப் 2 டையபட்டீஸ் பாதிப்பையும் தடுக்க முடியும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் இது பயன்படுகிறது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது டைப் 2 டையபட்டீஸ் பாதிப்பையும் தடுக்க முடியும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
மிளகில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துகள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிளகு எவ்வாறு பயன்படுகிறது என்றும், அதனை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மிளகு பயன்படுகிறது. இதேபோல், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளையும் இது தடுக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். ஏனெனில், ஃப்ரீ ரேடிகல்ஸ்-ன் வளர்ச்சியை இது எதிர்த்து போராடுகிறது.
மேலும், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் இது பயன்படுகிறது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது டைப் 2 டையபட்டீஸ் பாதிப்பையும் தடுக்க முடியும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகப்படுத்துகிறது.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பையும் இது வெளியேற்ற உதவுகிறது. இதனால் உடல் எடையை பராமரிக்க இது பயன்படுகிறது. இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக நிர்வகித்த, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் மிளகில் இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனினும், சிறுநீரக கல் இருப்பவர்கள் மிளகுத் தூள் அதிகமாக எடுப்பதை தவிர்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகுத் தூள் சாப்பிடலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.