காலையில் ஒரு டீஸ்பூன் நெய் இப்படி சாப்பிடுங்க… முடி உதிர்வை தடுத்து அடர்த்தியா வளர உதவும்; டாக்டர் மைதிலி
டாக்டர் மைதிலி கூறுகிறார், தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொள்வது முடி உதிர்வைத் தடுக்க உதவும். நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிக்கு வலிமை அளித்து, உதிர்வை குறைக்கும் என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் மைதிலி கூறுகிறார், தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொள்வது முடி உதிர்வைத் தடுக்க உதவும். நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிக்கு வலிமை அளித்து, உதிர்வை குறைக்கும் என்று அவர் கூறுகிறார்.
ஆரோக்கியமான கொழுப்பாகக் கருதப்படும் பொருட்களில் நெய் - யும் ஒன்றாகும். இவற்றை சூடாக சமைத்த உணவுகளோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நெய் குடல் பகுதிகள் சீராக செயல்பட உதவும் என டாக்டர் மைதில் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
பசுவின் நெய் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தடுக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடித்து வரலாம். ஞாபக சக்தி அதிகரிக்கும். தினசரி காலை வெறும் வயிற்றில், நெய் குடிப்பதால் சருமத்தின் நிறம் மேம்படும். மேலும் குடல் அழற்சி குறைந்து செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது.
மேலும் இந்த பழக்கம் வாயு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. குடலைச் சுத்தப்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற இது உதவுகிறது.
Advertisment
Advertisements
அதிலும் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதோடு, அதீத பசியை கட்டுப்படுத்துகிறது. நெய்யில் இருக்கும், வைட்டமின், ஏ.டி இ ஆகிய சத்துக்கள் உடல் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும். இளமையுடன் இருக்க உதவும் நெய், முடி ஆரோக்கியமாக வளவும், மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
நெய்யை உட்கொள்வது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மேலும், நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர்க்கால்களுக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்க்க உதவுகின்றன. இதனால் முடி ஆரோக்கியமாக வளர்கிறது.
முடிக்கு மட்டுமல்ல, நெய் உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.