எந்த மாதிரியான தலைவலியாக இருந்தாலும் பொடுதலைக் கீரையை பேஸ்ட் மாதிரி அரைத்து பத்து போட்டால் சரியாகிவிடும் என்று டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
ஒற்றை தலைவலி, பொடுகு தொல்லை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கீரையை பற்றி டாக்டர் கூறுகிறார். அந்தக் கீரை தான் பொடுதலை கீரை. இந்தக் கீரையை எப்போதும் போல பூண்டு, மிளகு, சீரகம் எல்லாம் வைத்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் இன்சுலின் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்தும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையை எடுத்துக் கொள்ளலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கழிவுகளை வெளியேற்றும். ஆண்டிஆக்சிடென்ட் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும். கல்லீரல், நுரையீரல், மார்பக புற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
ஒற்றைத் தலைவலியால் பாதித்தவர்கள் வாரத்தில் ஒரு முறை இந்த கீரையை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக தலைவலி உள்ளவருக்கு இந்த கீரையை தண்ணீர் சேர்த்து அரைத்து பத்து மாதிரி தலையில் போட்டு விட்டால் தலைவலி நீங்கும்.
Advertisment
Advertisements
30 நாட்கள் இதனை தொடர்ந்து செய்தால் தலைவலி நீங்கும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்தப் பத்து போடலாம். மேலும் பொடுகு தொல்லை உள்ளவர்கள் பொடுதலை கீரையை அரைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மாதவிடாய் சுழற்சியையும் சீராக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.