பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள சிறுகுறிஞ்சான் மூலிகை, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் படைத்தது என்று டாக்டர் மைதிலி ஐரிஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
சிறுகுறிஞ்சான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. மேலும், மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற நாட்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுகுறிஞ்சான் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், HbA1c அளவை சரியான அளவில் பராமரிக்கவும் உதவுகிறது. கணையத்தைத் தூண்டி இன்சுலின் உற்பத்தியைச் சீராக்குவதன் மூலம் இரத்த சர்க்கரையை திறம்பட கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த மூலிகையை 60 முதல் 90 நாட்கள் வரை ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தேநீர் அருந்தலாம். இல்லையென்றால் இந்த இலையை மென்று சாப்பிடலாம்.
2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிறுகுறிஞ்சான் இனிப்பு சுவையின் மீதான ஏக்கத்தைக் குறைப்பதில் வியக்கத்தக்க வகையில் செயல்படுகிறது. இந்த இலையை மென்று சாப்பிட்டால், சிறிது நேரத்திற்கு இனிப்பு சுவையை உணர முடிவதில்லை.
Advertisment
Advertisements
ஆனால், மற்ற சுவைகளை வழக்கம் போல் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிப்பு சாப்பிடும் உணர்வை குறைக்க சிறுகுறிஞ்சான் டீ அருந்துவதும் நல்ல பலனைத் தரும். ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வருவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது என்றும் டாக்டர் மைதிலில் கூறுகிறார்.
உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்களுக்கு சிறுகுறிஞ்சான் ஒரு சிறந்த துணைவனாக இருக்கும். இது உடலில் உள்ள கெட்ட கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் தேநீர் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக நுரையீரல், கல்லீரல், சருமம் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. சிறுகுறிஞ்சான் சிறுநீரக கற்களைக் கரைத்து, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்துகிறது. இரத்த நாளங்களில் இறுக்கம் ஏற்படாமல் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள இந்த சிறுகுறிஞ்சான் மூலிகை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.