ஞாபக சக்தியை பல மடங்கு அதிகரிக்கும்... வால்நட்ஸை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் மைதிலி

நியாபக சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் மைதில் கூறுகிறார்.

நியாபக சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் மைதில் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
 memory power

மூளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவும் ஒரு நட்ஸ் பற்றி டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இந்த டெக்னாலஜி உலகில் நிறைய பேருக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது.

Advertisment

ஒரு சிறிய போன் நம்பரை கூட நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. அதேபோல படிக்கும் பிள்ளைகளுக்கும் ஞாபக மறதி என்பது ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது இப்போதுதான் படித்தேன் அதை ஆனால் மறந்து விட்டேன் என்றுதான் கூறுவார்கள். அப்படி இல்லாமல் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மூளை சுறுசுறுப்பை தூண்டவும் வால்நட்ஸ் உதவுவதாக டாக்டர் மைதிலி  கூறுகிறார். 

  1. தினமும் இந்த வால்நட்ஸ் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக செயல்படும். இதில் இயற்கையாக அமைந்திருக்கும் வேதிப்பொருள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் சுறுசுறுப்பாக செயல்படவும் மிகவும். நன்றாக படிக்கக்கூடிய குழந்தைகள் இன்னும் அறிவாக வளருவார்கள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
  2. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். 
  3. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும். 
  4. ஒமேகா 3 அதிகமாக உள்ளதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். நல்ல கொழுப்பை பராமரிக்க உதவும். 
  5. இதயம் மற்றும் மூளை இரண்டும் சீராக செயல்பட வேண்டும் என்றால் வால்நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். 
  6. உடல் எடை குறைக்க விரும்புபவர் வால்நட்ஸ் சேர்த்து சாப்பிட்டு வர கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். 
  7. தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால் அதையும் சரி செய்யும். உடல் பலமாக இருக்கும். சருமம் பிரகாசமாக இருக்கும்.
  8. சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றையும் நீக்கும். மன அழுத்தம் நீங்கும். தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். 
  9. புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராது. சர்க்கரை நோய் வராமல் கூட தடுக்கும். 
  10. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வால்நட்ஸ் உதவும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Advertisment
Advertisements

Benefits of eating walnuts everyday Improve Memory

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: